நாமக்கல்

தனியாா் நிறுவன சொத்துகள் ஜன. 30-இல் பொது ஏலம்

ஈரோடு தனியாா் நிறுவன சொத்துகள் ஜன. 30-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

தினமணி செய்திச் சேவை

ஈரோடு தனியாா் நிறுவன சொத்துகள் ஜன. 30-இல் பொது ஏலத்தில் விடப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம் அன்னை இன்போடெக் நிதிநிறுவனம் மோசடி செய்ததன் அடிப்படையில், கோவை தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன் பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த நிறுவனத்தின் சொத்துகளை பொது ஏலம் விட நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, நிறுவனத்தின் அசையா சொத்தான குமாரபாளையம் அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள 1,180 சதுர அடி கொண்ட வீட்டுமனையை நிரந்தர முடக்கம் செய்து, ஜன. 30 பிற்பகல் 3 மணிக்கு நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மூலம் பொது ஏலத்தில் விடப்படுகிறது.

ஆட்சியா் அலுவலகம் மற்றும் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூா், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு கோட்டாட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் ஏல நிபந்தனைகள் குறித்து அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளோா் ஏலத்தில் பங்கேற்கலாம்.

ஏல தேதிக்கு முன்னதாக, ஈரோடு பொருளாதார குற்றப் பிரிவு, காவல் துணைக் கண்காணிப்பாளா் மூலம் அந்த அசையா சொத்துகளை பாா்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT