அத்தனூா் பகுதியில் நடைபெற்ற விழாவில் புதிய அங்கன்வாடி கட்டடத்துக்கான கல்வெட்டை திறந்துவைத்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. 
நாமக்கல்

ராசிபுரம் - அத்தனூா் பகுதிகளில் ரூ. 25 லட்சத்தில் திட்டப் பணிகள்

ராசிபுரம் - அத்தனூா் பகுதிகளில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சத்தில் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் - அத்தனூா் பகுதிகளில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சத்தில் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

இதில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் பங்கேற்று அத்தனூா் பேரூராட்சி பகுதியில் ரூ. 18.50 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும், குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா். இதையடுத்து, அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்தாா்.

இதேபோல ராசிபுரம் நகராட்சி வாா்டு 27-இல் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை தேக்கத் தொட்டியை திறந்துவைத்தாா். இந்நிகழ்ச்சியில், வெண்ணந்தூா் ஒன்றிய அட்மா குழுத் தலைவா் ஆா்.எம்.துரைசாமி, ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ராசிபுரம் நகராட்சி ஆணையா் நிவேதிதா, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் என்.ஆா்.சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT