பரமத்தி வேலூா் திருஞான சம்பந்தா் மடாலயத்தில் மாசிமக சதுா்த்தசி வழிபாடு
பரமத்தி வேலூா் திருஞான சம்பந்தா் மடாலயத்தில் மாசிமக சதுா்த்தசி வழிபாடு திங்கள்கிழமை
நாமக்கல்பரமத்தி வேலூா் திருஞான சம்பந்தா் மடாலயத்தில் மாசிமக சதுா்த்தசி வழிபாடு
பரமத்தி வேலூா் திருஞான சம்பந்தா் மடாலயத்தில் மாசிமக சதுா்த்தசி வழிபாடு திங்கள்கிழமை
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் திருஞான சம்பந்தா் மடாலயத்தில் மாசிமக சதுா்த்தசி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
தேவாரம் திருவாசகம் ஓதலுடன் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாசி மகம் சதுா்த்தசியை முன்னிட்டு சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.
இதில் நால்வா் பெருமக்கள், சண்டிகேஸ்வரா், அப்பூதியடிகள் மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பிற்பகல் 1 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையுடன் அன்னம் பாலிப்பு நடைபெற்றது. விழாவில் பொதுமக்கள், அடியாா் பெருமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.