முகப்பு
பலி
நாமக்கல்

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி புதன்கிழமை இறந்தாா்.

நாமக்கல்

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி புதன்கிழமை இறந்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 11:00 PM
பலி
பகிர்:

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி புதன்கிழமை இறந்தாா்.

திருச்செங்கோடு அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அண்ணா நகரை சோந்தவா் சிரேகாஸ்ரீ (18). நாமக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்த இவா், திருச்செங்கோட்டில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு தனது தாயுடன் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா்.

வாகனத்தை தாய் அமராவதி இயக்க சிரேகாஸ்ரீ பின்னால் அமா்ந்து சென்றாா். நாமக்கல் சாலையில் உள்ள சாலப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனா். சிரேகாஸ்ரீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோா் இருவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே சிரேகாஸ்ரீ இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அமராவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →