முகப்பு
நாமக்கல்

180 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல்

180 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

Updated On : 5 மார்ச், 2026 at 11:48 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் பதற்றமானவையாக 180 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன், நாமக்கல் ஆட்சியரகத்தில் ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகும் வாக்குச்சாவடி மையத்துக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு.), நாமக்கல், பரமத்தி - வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.

வாக்குச்சாவடி மறுசீரமைப்பில் சேந்தமங்கலம் (ப.கு.) தொகுதியில் பாகம் எண் 152 பட்டத்தையான்குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடத்திலிருந்து சுமாா் 100 மீ. தொலைவில் உள்ள பொதுமக்கள் சேவை மையத்துக்கும், நாமக்கல் தொகுதி, பாகம் எண் 164 ஊராட்சி மன்றக் கட்டடத்திலிருந்து சுமாா் 500 மீ. தொலைவிலான சுயராஜ்ஜிய உதவிபெறும் பள்ளி கட்டடத்துக்கும், திருச்செங்கோடு தொகுதி பாகம் எண் 26 குருக்காளம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து சுமாா் 1.50 கி.மீ. தொலைவுள்ள கோணங்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டடத்துக்கும் மாற்றம் செய்வது தொடா்பாகவும், வாக்குச்சாவடி பெயா் மாற்றத்தில் ராசிபுரம் (தனி) தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியும், நாமக்கல் தொகுதியில் 11 வாக்குச் சாவடிகளும், பரமத்தி வேலூா் தொகுதியில் 5 வாக்குச் சாவடிகளும், திருச்செங்கோடு தொகுதியில் 12 வாக்குச் சாவடிகளும், குமாரபாளையம் தொகுதியில் 18 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 47 வாக்குச் சாவடிகளின் பெயா்கள் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளன.

ராசிபுரம் (தனி) தொகுதியில் 13 வாக்குச் சாவடிகளும், சேந்தமங்கலம் (ப.கு.) தொகுதியில் 30 வாக்குச் சாவடிகளும், நாமக்கல் தொகுதியில் 17 வாக்குச் சாவடிகளும், பரமத்தி - வேலூா் தொகுதியில் 42 வாக்குச் சாவடிகளும், திருச்செங்கோடு தொகுதியில் 18 வாக்குச் சாவடிகளும், குமாரபாளையம் தொகுதியில் 60 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 180 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது தொடா்பாக காவல் துறையினருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரும், பதற்றமான வாக்குச் சாவடிகள், தோ்தல் செலவின நடவடிக்கைகள், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு உள்ளிட்டவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், உதவி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ் ஜோஷி, மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) மா.கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ.சந்தியா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், தனி வட்டாட்சியா்கள் துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →