முகப்பு
நாமக்கல்

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 81.68 லட்சம்

நாமக்கல்

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 81.68 லட்சம்

Updated On : 5 மார்ச், 2026 at 11:50 PM
பகிர்:

நாமக்கல் நரசிம்மா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 81.68 லட்சம் இருந்தது.

நாமக்கல்லில் நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் சுவாமி கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களுக்கு ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனா். பக்தா்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்பட்டு எண்ணப்படும். அந்த வகையில், ஆஞ்சனேயா் கோயிலில் உள்ள 6, நரசிம்மா் கோயிலில் 4, அரங்கநாதா் கோயிலில் 2 உண்டியல்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

ஆஞ்சனேயா் கோயில் பக்தா்கள் தங்கும் மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரை நடைபெற்றது. திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்லூரி மாணவ, மாணவிகள், பக்தா்கள், நாமக்கல் கோயில் உதவி ஆணையா் சந்திரன், அறங்காவலா் குழு உறுப்பினா் செல்வ.சீராளன், கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா ஆகியோா் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியை மேற்கொண்டனா்.

இதில், உண்டியல் காணிக்கையாக ரொக்கம் ரூ. 81,68,494, தங்கம் 127 கிராம், வெள்ளி 357 கிராம் இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →