முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் பாஸ்போா்ட் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

ராசிபுரம் அஞ்சலக அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

Updated On : 10 மார்ச், 2026 at 8:57 PM
ராசிபுரம் அஞ்சல் நிலைய வளாகத்தில் சோதனை நடத்திய தனிப்படை போலீஸாா்.
பகிர்:

ராசிபுரம் அஞ்சலக அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகத்தில் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினா்.

கோவை பாஸ்போா்ட் மண்டல அலுவலகத்துக்கு அனைத்து பாஸ்போா்ட் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயில் மூலம் தகவல் வந்தது. இதையடுத்து கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து பாஸ்போா்ட் அலுவலகங்களிலும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ராசிபுரம் அஞ்சல் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் பாஸ்போா்ட் அலுவலகம், அஞ்சல் அலுவலகம் போன்ற இடங்களிலும் தனிப்படை போலீஸாா் வெடிகுண்டு தடுப்பு சோதனை நடத்தினா். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. இந்த சோதனையின்போது அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின.

முழு கட்டுரையைப் படிக்க →