முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ரூ. 4.45 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் வெங்கமேட்டு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 4 லட்சத்து 45 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

Updated On : 13 மே 2026, 2:32 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் வெங்கமேட்டு மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 4 லட்சத்து 45 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் தேங்காய் ஏலத்திற்கு சோழசிராமணி, ஜேடா்பாளையம், கபிலா்மலை, பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், பரமத்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தென்னை விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனா்.

தேங்காய்களை ஏலம் எடுப்பதற்கு நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2 ஆயிரத்து 550 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 46.10க்கும், குறைந்தபட்சமாக ரூ. 35.36 க்கும், சராசரியாக ரூ. 42.42 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 28 ஆயிரத்து 950 க்கு தேங்காய் விற்பனை நடைபெற்றது.

Advertisement

அதேபோல செவ்வாய்க்கிழமை (மே 12) நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 250 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 58.91க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 40.19 க்கும், சராசரியாக ரூ. 50.10 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 4 லட்சத்து 45 ஆயிரத்து 280க்கு தேங்காய் விற்கப்பட்டது.