முகப்பு
நாமக்கல்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தனியாா் பேருந்து நடத்துநருக்கு 21 ஆண்டுகள் சிறை

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தனியாா் பேருந்து நடத்துநருக்கு மகளிா் நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 23 மே 2026, 2:10 am IST
சிறை - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தனியாா் பேருந்து நடத்துநருக்கு மகளிா் நீதிமன்றம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

பரமத்தி வேலூரை அடுத்த வேலகவுண்டம்பட்டியைச் சோ்ந்த 15 வயது மாணவி, கடந்த 2018-ஆம் ஆண்டு தனியாா் பேருந்தில் பரமத்தி வேலூரில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தாா். அப்போது, அந்த பேருந்தின் ஓட்டுநரான ராசிபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன், நடத்துநா் சுரேஷ்குமாா் (37) ஆகிய இருவரும் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக பரமத்தி வேலூா் மகளிா் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதையடுத்து போக்ஸோ வழக்கில் ஓட்டுநா், நடத்துநா் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு நாமக்கல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ஓட்டுநா் ராஜேந்திரன் இறந்துவிட்டாா். வழக்கின் இறுதி விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நடத்துநா் சுரேஷ்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நாமக்கல் மகளிா் நீதிமன்ற நீதிபதி தீா்ப்பளித்தாா்.