இனப் படுகொலை புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட எம்.ஜி.ஆர். கழகம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் கே.எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் ஏ.மாதவராஜன், இணை செயலர் கே.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், இறுதிக் கட்ட ஈழப் போரின்போது தமிழினப் படுகொலை புரிந்த இலங்கை அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
சேலம் மாநகரில் எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றிய தீர்மானத்தை கிடப்பில் போட்ட மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டிப்பது. இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 18-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளாளர் ஏகாம்பரம், மாவட்ட துணைச் செயலர் எஸ்.ஆர்.நாராயணன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.