சேலம்

முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கைது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

மேட்டூர் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலரும், நங்கவள்ளி முன்னாள் ஒன்றியக் குழு தலைவருமான பழ.ஜீவானந்தம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மக்கள் குறை கேட்டு மனு வாங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது அவருக்கு எதிராக பழ.ஜீவானந்தம் போராட்டம் நடத்த முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மேட்டூர் வட்டாட்சியர் வீரப்பன் அழைப்பின் பேரில் நங்கவள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்ற பழ. ஜீவானந்தத்தை, போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜா முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைக் கண்டித்து நங்கவள்ளி பேருந்து நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட துணைச் செயலர் முனுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT