சேலம்

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் பலத்த மழை: கசிவுநீர் குட்டைகள் நிரம்பின

தினமணி

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டைகள் நிரம்பின.
 எடப்பாடி சுற்றுப்புற பகுதிகளான வெள்ளரிவெள்ளி, மொரசப்பட்டி, சித்தூர், செட்டிமாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டியது. முன்னதாக பகல் முழுவதும் கடும் வெப்பம் நிலவியது. இரவு 10 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. விட்டுவிட்டு பெய்த மழையினால் இப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டைகள் நிரம்பியதுடன்,
 பாசனப் பயன்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின் பெய்த இந்த மழையால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் வரும் நாள்களில் இதுபோன்று பலத்த மழை பெய்யும் நிலையில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT