சேலம்

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினமணி

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வலியுறுத்தி, சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 குறைந்தபட்ச சம்பளமாக ரூ.18,000 என்பதை உறுதிப்படுத்த வேண்டும், 2003-க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
 ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ சம்மேளனத் துணைத் தலைவர் அருணகிரிநாதன், பொதுச் செயலர் செல்வகுமார், மத்திய சங்க நிர்வாகி செந்தில்குமார், கார்த்திகேயன், எல்.பிஎஃப். நிர்வாகி பாலகிருஷ்ணன், அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகி ஆறுமுகம், தேமுதிக நிர்வாகி செல்வமணி, ஏஐடியூசி முருகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT