சேலம்

ஊதிய உயர்வு வழங்கக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தினமணி

ஊதியஉயர்வு வழங்கக் கோரி, சேலத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஊதிய மாற்றம் வழங்கப்பட வேண்டும். ஆனால், ஊதியஉயர்வு வழங்கப்படாது என்றும், நாடு முழுவதும் உள்ள 1.30 லட்சம் டவர்களை பிரித்து, தனி நிறுவனம் அமைத்து தனியார்மயத்துக்கு வழிவகுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை இரு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதில், சென்னையில் 8 ஆயிரம் ஊழியர்களும், தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
 சேலம் மண்டலத்தில் சுமார் 1,500 ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காரணமாக, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் இயங்கவில்லை. அதேபோல, செல்லிடப்பேசி மற்றும் சாதாரண தொலைபேசி கட்டணம் செலுத்த முடியவில்லை. பழுது பார்க்கும் பணியும் நடைபெறவில்லை.
 ஆனால், பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி சேவை தடையின்றி வழக்கம் போல செயல்படும் என பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை.. காப்பாற்றிய குடியிருப்புவாசிகள்!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT