சேலம்

சேலத்தில் தனியார் பேருந்துகள் மோதல்: 20 பயணிகள் காயம்

DIN

சேலத்தில் ரயில் நிலையம் அருகே தனியார் பேருந்து மீது சிற்றுந்து நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் 20 பயணிகள் காயமடைந்தனர்.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளாளப்பட்டி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து புதன்கிழமை காலை ரயில் நிலையம் வந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பின்னர், ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றிச் செல்ல நின்றிருந்தது. அப்போது இரும்பாலை சர்க்கார் கொல்லப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த சிற்றுந்து புது சாலை மேம்பாலத்தைக் கடந்து வந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து, பயணிகளை ஏற்றிச் செல்ல காத்திருந்த தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சிற்றுந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது.
இச் சம்பவத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் ராமச்சந்திரன், நடத்துநர் குமார் உள்ளிட்ட 20 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்த சூரமங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி
வைத்தனர்.
விபத்து குறித்து போக்குவரத்துக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே சிற்றுந்து ஓட்டுநர் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த முருகேசனை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர் மது போதையில் பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT