சேலம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

தினமணி

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.
 மேட்டூர் அனல் மின்நிலையத்தில் தலா 210 மெகாவா திறன்கொண்ட நான்கு பிரிவுகள் உள்ளன. இவற்றின் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். மேலும் 600 மெகாவாட் திறன்கொண்ட புதிய பிரிவும் இயங்கி வருகிறது. திங்கள்கிழமை 600 மெகாவாட் திறன்கொண்ட பிரிவில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. ஏற்கெனவே 210 மெகாவாட் திறன்கொண்ட பிரிவில் இரு அலகுகள் இயங்காத நிலையில் 600 மெகாவாட் திறன் கொண்ட பிரிவில் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT