சேலம்

சோனா கல்லூரியில் தேசிய அளவிலான திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம்

DIN

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த அகில இந்திய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் இந்தியாவில் நகர திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
சோனா கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை மற்றும் இந்திய பொறியாளர் சங்கம் (இந்தியா) நிறுவனமும் இணைந்து நடத்தியது.
கல்லூரியின் துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் உஷா மற்றும் கல்லூரியின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா பேசுகையில், மாணவர்களிடையே சுற்றுச்சூழல் செய்திகளை கல்லூரிப் பேராசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக துறைத் தலைவர் மாலதி, கருத்தரங்கின் முக்கியத்துவத்தையும் மற்றும் பேச்சாளர்களையும் அறிமுகப்படுத்தி வரவேற்றார்.
கருத்தரங்கின் சிறப்புப் பேச்சாளராக தேசிய தொழில்நுட்பக் கல்லூரி (என்.ஐ.டி. திருச்சி) இணைப் பேராசிரியர் எஸ்.ஆர்.ரமேஷ், மற்றும் சஸ்டைனேபில் இன்விரோ புரோமோட்டர்ஸ் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எம்.பி. ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT