முகப்பு
சேலம்

மேட்டூர் அணை நீர் திறப்பு: 4 ஆயிரம் கன அடியாகக் குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு அக்டோபர் 2-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.  இதையடுத்து, பாசனப் பகுதிகளின் தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு  அதிகரித்தும்,  குறைத்தும் விடப்படுகிறது.
இந்த நிலையில்,  செவ்வாய்க்கிழமை மாலை அணையிலிருந்து நீர் திறப்பு நொடிக்கு 9 ஆயிரம் கன அடியிலிருந்து 6 ஆயிரம் கன அடியாகவும்,  புதன்கிழமை காலை  நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகவும்  குறைக்கப்பட்டது.  அணைக்கு நொடிக்கு 4,141 கன அடி வீதம் தண்ணீர்  வந்து கொண்டிருக்கிறது.  அணையின் நீர்மட்டம் 84.98 அடியாகவும்,  நீர் இருப்பு 47.09 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →