சேலம்

ரயிலில் தவறி விழுந்து இறந்த சி.ஆர்.பி.எஃப். வீரர் உடலுக்கு அதிகாரிகள் அஞ்சலி

DIN

ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை (சி.ஆர்.பி.எஃப்.) வீரர் சசிகுமார் (42) உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படைப் பிரிவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சாந்தி, இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் 20 நாள்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்குச் செல்வதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து புதுதில்லி செல்லும் கேரள விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். இதனிடையே வியாழக்கிழமை அதிகாலையில் சேலம் அருகே தின்னப்பட்டி - டேனிஷ்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே ரயில் சென்ற போது, படிக்கட்டில் நின்றிருந்தவர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து சேலம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் அப்புசாமி உள்ளிட்டோர் சசிகுமாரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், சசிகுமாரின் உடல் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு மாநகர துணை ஆணையர் தங்கதுரை, உதவி ஆணையர்கள், மத்திய அதிவிரைவுப் படை ஆய்வாளர் ஆல்பர்ட் தலைமையிலான வீரர்கள் சசிகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT