சேலம்

சேலத்தில் நாளை புத்தகத் திருவிழா தொடக்கம்

DIN

சேலத்தில் புதன்கிழமை (நவ.15) முதல் 33-ஆவது தேசிய புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
சேலம் போஸ் மைதானத்தில் காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. மாலை 5.30 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.ராஜன் கண்காட்சியைத் திறந்து வைக்கிறார்.  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகௌரி முதல் விற்பனையைத் தொடக்கி வைக்கிறார். மாவட்ட நூலக அலுவலர் வே.மாதேஸ்வரன் முதல் விற்பனையைப் பெறுகிறார்.
கண்காட்சியில் நேஷனல் புக் டிரஸ்ட்,  சாகித்ய அகாதெமி, அம்பேத்கர் பவுண்டேஷன் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் இடம்பெறும்.
இக் கண்காட்சியில் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும், பள்ளி, கல்லூரி மற்றும் இதர கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும்.
இதில், மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் தலைமை வகிக்கிறார்.  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சண்முகம் சரவணன்,  மண்டல மேலாளர் அ.கணேசன்,  டி.சத்தியசீலன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

ஆடை சுதந்திரம் கோரியது குற்றமா? செளதியில் பெண்ணுரிமைப் போராளிக்குச் சிறை: அமைப்புகள் கண்டனம்!

"வாக்கு சதவிகித விவரங்களில் சந்தேகம்!”: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT