சேலம்

மணல் கடத்தல்: பிடிபட்ட ஓட்டுநர் லாரியுடன் மாயம்

DIN

மேச்சேரி அருகே மணல் கடத்தலில் பிடிபட்ட ஓட்டுநர், மணல் லாரியுடன் மாயமானது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
மேச்சேரி அருகே வெள்ளார் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலர் ஆர்.பாக்யராஜுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கடந்த 9-ஆம் தேதி கிராம உதவியாளர்முருகனுடன் பாக்கியராஜ் குண்டல்பள்ளம் பகுதியில், அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டார். பின்னர் மேச்சேரி காவல் நிலையத்துக்கு லாரியை எடுத்துச் செல்ல போலீஸாருக்கு தகவல் அளித்தார்.  போலீஸார் வர தாமதமான நேரத்தை பயன்படுத்தி, ஓட்டுநர் மணி லாரியுடன் அங்கிருந்து வனப் பகுதி வழியாக தப்பிச் சென்றார். லாரியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மேச்சேரி போலீஸில் மணல் லாரியுடன் தப்பிச் சென்ற தருமபுரி மாவட்டம், கம்மம்பட்டியைச் சேர்ந்த மணி மீது நடவடிக்கை எடுக்குமாறு பாக்கியராஜ் புகார் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

SCROLL FOR NEXT