சேலம்

வேளாண் தொழில்நுட்ப விழிப்புணர்வு

DIN

சங்ககிரி வேளாண் துறை "அட்மா' திட்டத்தின் சார்பில், கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு திங்கள்கிழமை விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது.
சங்ககிரி வேளாண் உதவி இயக்குநர் (பொ) அ.கணேசன் தலைமை வகித்து புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். இதில், உதவி வேளாண் அலுவலர்கள் குள்ளம்பட்டி தனபால், சக்திவேல், புள்ளாகவுண்டம்பட்டி கணேசன் ஆகியோர் பேசினர்.
சங்ககிரி வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெய்கிருஷ்ணன் பயிர்க் காப்பீடு குறித்து விளக்கினார்.  பின்னர் கலை நிகழ்ச்சிகள் மூலமும் வேளாண் புதிய தொழில்நுட்பங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இதில் தேவூர், புள்ளாகவுண்டம்பட்டி, அரசிராமணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT