சேலம்

சேலத்தில் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்கப்படுமா? மத்திய அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதி

சேலம் மாவட்டத்தில் கேந்திரீய வித்யாலயா பள்ளி எப்போது தொடங்கப்படும்  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஆர். ஆதித்தன்

சேலம் மாவட்டத்தில் கேந்திரீய வித்யாலயா பள்ளி எப்போது தொடங்கப்படும்  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
நாடு முழுவதும் சுமார் 1,142 கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் சென்னை,  கோவை,  மதுரை,   திருச்சி,  பெரம்பலூர்,  திருவாரூர்,  விருதுநகர்,  நீலகிரி,  தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 45 கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகள்,   ராணுவம் மற்றும் துணை ராணுவ அமைப்புகளில் பணியாற்றும் குழந்தைகள்,   மாநில அரசு மற்றும் பொது பிரிவுகளில் உள்ள  குழந்தைகள் கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். சேலம் மாவட்டத்தில் ரயில்வே கோட்ட அலுவலகம்,  வருமான வரித் துறை அலுவலகம்,  மத்திய சுங்க மற்றும் கலால் துறை அலுவலகம்,  பொதுத் துறை நிறுவனங்களான சேலம் உருக்காலை,  பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சேலம் நகரில் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.   மத்திய அரசுப் பணியாளர்களின் குழந்தைகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து இடமாற்றலாகி வரும் அதிகாரிகளின் குழந்தைகள் படிப்பதற்கு ஏதுவாக கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட  வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும்,  மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணியாளர்களின் குழந்தைகள் அதிகக் கட்டணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் படிக்கும் சூழல் உள்ளது.
இந்த நிலையில்,  சேலம் மாவட்டத்தில் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கு  மாவட்ட கல்வித் துறை மூலம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசுக்குப் பரிந்துரை வைத்திட வேண்டும்.  தமிழக அரசு,  மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து கேந்திரீய வித்யாலயா பள்ளிகளைத் தொடங்கப்படுவது நடைமுறையாக உள்ளது.
அதேநேரத்தில்,  சிறிய மாவட்டமான சிவகங்கையில் 2 கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.  ஆனால்,  பெரிய மாவட்டமாக உள்ள சேலத்தில்   கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
இதுதொடர்பாக கல்வியாளர்கள்,  சமூக ஆர்வலர்கள் கூறியது:
தமிழகத்தில் சேலம் பெரிய மாவட்டமாக உள்ளது.  தற்போது முதல்வரின் சொந்த மாவட்டமாக உள்ளது. இங்கு மத்திய அரசு அலுவலகங்கள்,  பொதுத் துறை நிறுவன அலுவலகங்கள் அதிகளவில் உள்ளன.  மேலும் வெளி மாநிலங்களில் இருந்து இடமாற்றலாகி பணிபுரிந்து வருகின்றனர்.
எனவே,  கேந்திரீய வித்யாலயா பள்ளியை சேலம் நகரின் மையப் பகுதியில் அமைத்திட மாவட்டக் கல்வித் துறையும்,  மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளையில், மத்திய அரசு விதிமுறைகளின்படி மத்திய அரசுப் பணியாளர்கள் பணிபுரியும் நகரின் மையப் பகுதியில்தான் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட வேண்டும். மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள பகுதி,  வசிப்பிடப் பகுதி அருகேதான் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. 
மாறாக,  வெளிப் பகுதியிலும் மத்திய அரசு அலுவலகங்கள் இல்லாத பகுதியிலும்,  மத்திய அரசுப் பணியாளர்கள் அப் பகுதியில் இல்லாத நிலையில் கேந்திரீய வித்யாலயா பள்ளி அமைப்பது சாத்தியமில்லாதது.
அதேவேளையில்,  சேலம் நகரின் மையப் பகுதியில் அரசுக்குப் போதிய இடம் இருந்த நிலையில் ஏற்காடு,  பெத்தநாயக்கன்பாளையம்,  எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கேந்திரீய வித்யாலயா பள்ளியை அமைக்க முயற்சித்து நடந்து வருவதாகத் தெரிகிறது.  இதுபோன்ற முயற்சிகளினால் கேந்திரீய வித்யாலயா பள்ளி சேலத்துக்கு வருவது தள்ளிப் போகிறது. கேந்திரீய வித்யாலயா பள்ளி நகரில் அமைவதன் மூலம் பல தரப்பினர் படிக்க முடியும்.  அதேநேரத்தில், கேந்திரீய வித்யாலயா பள்ளியை அமைப்பதில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும்  என்றனர்.
இதுதொடர்பாக,  கல்வித் துறையினர் கூறியது: 
சேலம் மாவட்டத்தில் கேந்திரீய வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கு ஆர்வமாக உள்ளோம்.  அதேநேரத்தில் நகரின் மையப் பகுதியில் போதிய காலி இடம் இருப்பதால்,  இங்கேயே பள்ளி தொடங்க அனுமதி பெற்றுத் தர வேண்டும்.  இதற்கான பரிந்துரையை ஏற்கெனவே மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளோம்.  மாவட்ட நிர்வாகமும் விரைந்து கவனம் செலுத்தி,  மத்திய அரசு அலுவலகங்கள் நிறைந்த மற்றும் வசிப்பிடத்துக்கு அருகிலேயும்,  வெளி மாநிலங்களில் இருந்து இட மாற்றலாகி சேலம் வருவோரின் குழந்தைகள் படிக்கும் வகையில் சேலம் நகரின் மையப் பகுதியிலும் கேந்திரீய வித்யாலயா பள்ளியை அமைத்திட வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT