சேலம்

டெங்கு தடுப்பு நடவடிக்கை: பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஆய்வு

DIN

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன்  சனிக்கிழமை ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
தம்மம்பட்டி,  செந்தாரப்பட்டி பேரூராட்சிப் பகுதியில்  பேருந்துநிலையம் உள்ளிட்ட  பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை நேரில்  ஆய்வு செய்தார். அப்போது சுகாதார மற்றும் டெங்கு தடுப்புக்கான களப் பணியாளர்களுக்கு உதவி இயக்குநர் கண்ணன் ஆலோசனைகள் வழங்கினார்.
தேநீர்க் கடைகளில்  காகிதக் கப்புகளில் தேநீர் தரக்கூடாது, பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்களை விற்கக்கூடாது எனஅறிவுறுத்த வேண்டும். மீறிச் செயல்படுவோருக்கு அபராதம் விதிக்கவும் அறிவுரை வழங்கினார்.
அப்போது,  தம்மம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பழனிசாமி, செந்தாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு)அப்துல் சாதிக்பாஷா, சுகாதார ஆய்வாளர் ஜமால்முகமது ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT