எடப்பாடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் எட்டுவயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து எடப்பாடி நகர
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் எட்டுவயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து எடப்பாடி நகர முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகமது முஸ்தபா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோட்டை அமீர், அமானுல்லா, ஹாஜாகனி , முஹம்மது ரயீஸ், நைனாம்பட்டி தர்வேஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். சிறுமி கொலை வழக்கில் நீதி கிடைக்க வேண்டும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஆதித் தமிழர் பேரவை, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். எடப்பாடி, நைனாம்பட்டி, ஆவணியூர், கோட்டை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.