சேலம்

கிராம தூய்மை நிலை முன்னேற்றம்: மத்தியக்குழு ஆய்வு

தினமணி

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மன்னாயக்கன்பட்டி ஊராட்சியில், கிராம தூய்மை நிலை முன்னேற்றம் குறித்து கணக்கெடுப்பிற்காக, மத்தியக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினர்.
 மாநிலம் முழுவதும் கிராம தூய்மை நிலை சுகாதார முன்னேற்றம் குறித்து, மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
 கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களையும், மாவட்டங்களையும் தரவரிசைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள மத்திய ஆய்வுக்குழு 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் கிராமங்களின் தூய்மை நிலை முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
 வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், மன்னாயக்கன்பட்டி ஊராட்சியில் ஆய்வுக்குழுவினர், தனிநபர் இல்ல கழிப்பறைகள், பொதுக் கழிப்பறைகள், பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையங்கள், கோயில்கள், பொது இடங்கள், சாலையோரங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு நடத்தினர்.
 கிராமத்தின் துôய்மை நிலை முன்னேற்றம் மற்றும் சுகாதார மேம்பாடு குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின் போது, மாவட்ட உதவி செயற்பொறியாளர் சாய் ஜனார்த்தனன், வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலினி, செந்தில் குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன், ஊராட்சி செயலாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT