ஆத்தூரில் புதிய வழித்தடப் பேருந்து தொடக்கம்
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்தை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
ஆத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்தை மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
ஆத்தூரிலிருந்து நரசிங்கபுரம், செல்லியம்பாளையம், ராமநாயக்கன்பாளையம் வழியாக அய்யங்கரடு வரை இயக்கப்படும் புதிய வழித்தட நகரப் பேருந்து தொடக்க விழா ஆத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பள்ளி மாணவர்கள் சென்றுவர வசதியாக இயக்கப்படவுள்ள இந்தப் பேருந்தை நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர். இளங்கோவன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
ஆத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர். எம். சின்னதம்பி, நகரச் செயலாளர் அ.மோகன், ஆத்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் இரா. தென்னரசு, நரசிங்கபுரம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எம். பாலமுருகன், அவைத் தலைவர் பி.கலியன், ராஜமாணிக்கம், காளிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.