வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு
சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM
சங்ககிரி புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்.
சேலம் அருகே உள்ள பெரியசீரகாபாடி பகுதியைச் சேர்ந்த சுப்பராயன் மகன் கோபி. இவர் சனிக்கிழமை தனது தாய் பாப்பாவுடன் (50) இருசக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி வந்துள்ளார். அப்போது சங்ககிரி, புதிய பேருந்து நிலையம் அருகே எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததால் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறியதில் கீழே விழுந்த பாப்பா பலத்த காயமடைந்தார். இதையடுத்து தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.