சேலம்

பாலாறு வழியாக ஒகேனக்கல் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

தினமணி

பாலாறு வழியாக கர்நாடக மாநிலம் மாறுகொட்டாய் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது.
 கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்திலிருந்து பாலாறு வழியாக ஒகேனக்கல்லின் எதிர்புறம் உள்ள மாறுகொட்டாய் பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருவார்கள். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்றுவரும் இப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். மாறுகொட்டாயிலிருந்து பரிசல் மூலம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருவார்கள். தற்போது, வெள்ளப்பெருக்கு காரணமாக மாறு கொட்டாய் செல்லும் பயணிகள் பாலாறு அருகே உள்ள சோதனைச் சாவடியில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் மேட்டூர் , பெங்களூரு, மைசூரு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பிச் செல்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT