சேலம்

ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் மற்றும் முதல்வர் (பொ) ஆர்.ரங்கசாமி கூறியது: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும், மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன.
தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள், இவற்றுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.
மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்து கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். மாணவர் விரும்பினால் பல மாவட்டங்களில் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக சமர்ப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மாவட்ட கலந்தாய்வுக்கான கடிதம் தாங்கள் கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்பப்படும். இணையதளத்தில் வரும் ஜூன் 27-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர் மற்றும் முதல்வர் ஆர்.ரங்கசாமி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சேலம்- 636 007 என்ற முகவரியிலும், 0427 -2400074, 2401874 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT