சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டருக்கு 5 ஆண்டு சிறை
சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், காரிப்பட்டியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ராஜேந்திரன் (51) . இவர் 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, பெயிண்டர் ராஜேந்திரனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம்
அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ஆர்.காந்திமதி ஆஜரானார்.