தம்மம்பட்டியில் பெண்களுக்கு தொல்லை கொடுத்தவர் கைது
தம்மம்பட்டியில் இரவு நேரங்களில் திறந்த வெளிக்கழிப்பிடங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த
தம்மம்பட்டியில் இரவு நேரங்களில் திறந்த வெளிக்கழிப்பிடங்களுக்குச் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தம்மம்பட்டி 16-வது வார்டு தென்றல் நகரில் இரவு நேரங்களில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற பெண்களை மர்ம நபர் ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்று வந்துள்ளார். இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தம்மம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தினர்.
இந்த நிலையில், புதன்கிழமை காலை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்ணை, காட்டுப் பகுதியில் நின்று கொண்டு ஒருவர் அழைத்துள்ளார். இதனையடுத்து அந்த பகுதியைச்சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து அந்த நபரைப் பிடித்து தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் கட்டட மேஸ்திரி தமிழ்ச்செல்வன் (23) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் விஜயகுமார் கூறுகையில், பெண்களை மானபங்கம் செய்ய முயற்சித்தல், தவறான நோக்கத்துடன் அழைத்தல் உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.