பங்குனி உத்திரம்: சேலம் கோட்டத்திலிருந்து பழனிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலமாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலமாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் மு.கஜேந்திரன் தெரிவித்துள்ளது:
வரும் மார்ச் 30 ஆம் தேதி பங்குனி உத்திரம் மற்றும் பெளர்ணமி கிரிவலம் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மூலமாக மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை சேலம் - பழனி (வழி) ஈரோடு காங்கயம், நாமக்கல் - பழனி (வழி) கரூர், நாமக்கல் - பழனி (வழி) கொடுமுடி, சேலம், ஆத்தூர் (வழி) வடசென்னிமலை, கள்ளக்குறிச்சி - வடசென்னிமலை, தருமபுரி - பழனி, சேலம் - திருவண்ணாமலை ஆகிய வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே, பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிர்த்து பயணம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.