பார் கவுன்சில் தேர்தல்: சங்ககிரியில் 137 பேர் வாக்களித்தனர்
தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞர் சங்க பார் கவுன்சில் தேர்தல் தமிழகம் முழுவதும புதன்கிழமை நடைபெற்றது. இத் தேர்தலில் சங்ககிரி வாக்குச்சாவடி மையத்தில் 137 பேர் வாக்களித்துள்ளனர்.
தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞர் சங்க பார் கவுன்சில் தேர்தல் தமிழகம் முழுவதும புதன்கிழமை நடைபெற்றது. இத் தேர்தலில் சங்ககிரி வாக்குச்சாவடி மையத்தில் 137 பேர் வாக்களித்துள்ளனர்.
தமிழ்நாடு - புதுச்சேரி பார்கவுன்சில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அதில் சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் 152 வாக்காளர்களில் 137 பேர் வாக்களித்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குச்சாவடி மையத்தில் இருவாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. வாக்குச்சாவடி நிலைய அலுவலராக ஓய்வு பெற்ற நாமக்கல் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி வி.சம்பத்குமார், உதவி நிலைய அலுவலர்களாக வழக்குரைஞர்கள் என்.சந்திரன், எஸ்.மோகனசுந்தரம் ஆகியோர் பணியாற்றினர். வாக்குப்பதிவுகளை சங்ககிரி சார்பு நீதிபதி இ.ராஜேந்திரகண்ணன், 2-ஆவது குற்றவியில் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயமணி ஆகியோர் மேற்பார்வையாளர்களாகப் பார்வையிட்டனர். வாக்குப்பதிவுக்கு பின்னர் இரண்டு வாக்குப் பெட்டிகளும் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.