நடிகர் அஜித் பிறந்த நாளில் ஓர் ஏமாற்றம்!
ஏகே - 64 குறித்து அறிவிப்பு இல்லை...
நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாளில் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக கார் பந்தயங்களில் கலந்துகொண்டார். அதற்கான, பயிற்சிகளை மேற்கொண்டு முறையாக போட்டியில் கலந்து முக்கியமான வெற்றிகளையும் பெற்றார். இதனால், அஜித்குமார் ரேசிங் பலராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித்தின் பிறந்த நாளான நேற்று (மே. 1) ஆழ்வார் மற்றும் பில்லா திரைப்படங்கள் மறுவெளியீடானது. அதனைக் கண்டுகளித்த ரசிகர்கள் அஜித்துக்கு வாழ்த்துகளையும் கூறினர்.
Advertisement
Advertisement
ஆனால், பிறந்த நாளில் உறுதியாக ஏகே - 64 திரைப்படத்தின் அப்டேட் ஏதாவது வெளியாகும் எனக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
குட் பேட் அக்லி வெளியாகி ஓராண்டு கடந்த பின்பும் அடுத்த படத்தின் போஸ்டர் கூட வெளியாகாதது அஜித் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏகே - 64 திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க ஸ்ரீலீலா நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
The lack of an announcement about actor Ajith Kumar's next film on his birthday has disappointed fans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.