சேலம்

திரெளபதி அம்மன் ஆலயத்தில் மகாசாந்தி ஹோமம், கூட்டுப் பிரார்த்தனை

DIN

ஆத்தூர் திரெளபதி அம்மன் ஆலயத்தில் மகாசாந்தி ஹோமம், கூட்டுப் பிரார்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூர் திரெளபதி அம்மன் ஆலய தீமிதிப் பெருவிழா மற்றும் திருத்தேர் விழா காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியோடு தொடங்கி நடந்து வருகிறது.இதில் பெண்களால் நடத்தப்படும் மகாசாந்தி ஹோமம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு  ஆரம்பமானது. முழுவதும் பெண்களால் நடத்தப்படும் இந்த மகாசாந்தி ஹோமத்தில்                                                                                            அன்னை பாஞ்சாலி, கிருஷ்ண பகவான் மற்றும் அனைத்து தெய்வங்கள், தேவதைகளை மந்திரம் மூலமாக வரவழைத்து பிரார்த்தனை, கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த மகாசாந்தி ஹோமத்தை மல்லிகா மருதமுத்து, எம்.கோபிநாதன் -தேவி, எம்.நவநீதன்- கஸ்தூரி கட்டளைதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியை துளுவவேளாளர் மகாஜன மன்றத் தலைவர் எஸ்.அருணாசலம்,திருப்பணிக்குழுத்தலைவர் ஆர்.வசந்தன், செயலர் அ.திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் கே.மாரிமுத்து, எஸ்.பழனிசாமி, துணைச்செயலர் ஆர்.ஆறுமுகம்,அறங்காவலர்கள் ஏ.ராஜாராம், சி.ஆறுமுகம், எம்.வடமலை, பி.குமரன், பெரியதனக்காரர்கள் எஸ்.ஆர்.ஜெயராமன், ஜி.ராமன் ஆகியோர்  ஏற்பாடு செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT