சேலம்

விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

சேலம் மாவட்டம், வீரபாண்டி வட்டம், திருவளிப்பட்டியில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணை இயந்திரங்கள் குறித்து திங்கள்கிழமை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சியில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் இயந்திரம் ஆக்குதல் திட்டம், விவசாயக் குழு அமைத்து விலையில்லா வேளாண் இயந்திரங்கள் வழங்குதல், நவீன வேளாண் இயந்திரங்கள், பண்ணை இயந்திர வங்கிகளை ஏற்படுத்தி வாடகைக்கு வழங்குதல் குறித்தும், பிரதம மந்திரி வேளாண் பாசனத் திட்டம் குறித்தும், சொட்டு நீர், தெளிப்பு நீர் மற்றும் மழை தூவான் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வேளாண் செயற்பொறியாளர் ஏ.அழகுவேல், வட்டார தொழில்நுட்ப மேலாளர் கே.ராஜேந்திரன், விற்பனை பொறியாளர் ஜாகீர் இலியாஸ், உதவி தொழில்நுட்ப மேலாளர் சி.சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT