சேலம்

கராத்தே போட்டி: சங்ககிரி  மாணவர்கள் சாதனை

DIN

அனைத்திந்திய  அனைத்து தற்காப்புக் கலை சம்மேளனம் சார்பில் சேலம் காந்தி விளையாட்டு அரங்கில் மாநில அளவில் அண்மையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற சங்ககிரி கியோ கோஷின் மாணவர்களுக்கு கோப்பை,சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது ). 
இந்த கராத்தே போட்டியில் சங்ககிரி கியோ கோஷின் அமைப்பில்  பயிற்சி பெற்ற 50 மாணவர்கள் பல்வேறு எடை பிரிவில் கலந்து கொண்டனர். அதில் 35 கிலோ பிரிவில் எஸ்.சபரிநாத்,  32 கிலோ பிரிவில் எஸ்.தினகர், டி.தர்ஷித் நிபி,  28 கிலோ பிரிவில் கே.எம்.கிருஷ்சாந்த் ஆகியோர் முதலிடம் பெற்றனர். ஆர்.சஞ்சய்கார்த்திக்,  பி.ரஞ்சித்,  எம்.தமோதரன், ஜி.கார்த்திக் ஆகியோர் 2-ஆவது, 3-ஆவது இடங்களில் வெற்றி பெற்றனர்.  மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு சங்ககிரி கியோ கோஷின் தலைமை பயிற்சியாளர் கே.அர்ச்சுனன்  தலைமை வகித்தார்.
தொழிலதிபர் பி.பழனியம்மாள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.  இதில்  உதவிப் பயிற்சியாளர் சந்தோஷ்குமார், கே.அம்மாசி, முருகன்,  கிரி, எஸ்.என்.திவ்யானந்த் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT