சேலம்

சபரிமலையில் பழைய நிலை தொடர  சங்ககிரியில் சிறப்பு வழிபாடு

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்து பழைய நிலையே தொடர அனுமதியளிக்க வேண்டி சங்ககிரி அனைத்து ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் ஐயப்பன் சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
ஐப்பன் சுவாமிக்கு பால்,  தயிர்,  இளநீர், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு  பொருள்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சபரிமலையில்  பழைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐயப்பனின் பக்தி பாடல்களை  பாடினர்.   இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

யார் இந்த நடன மங்கை?

SCROLL FOR NEXT