கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில் இலக்கியப் பேரவை நிறுவனர் தின விழா
வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில், இலக்கியப் பேரவை நிறுவனர் தின விழா அண்மையில் நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில், இலக்கியப் பேரவை நிறுவனர் தின விழா அண்மையில் நடைபெற்றது.
வாழப்பாடி இலக்கியப் பேரவை நிறுவனர்களில் ஒருவரான, மறைந்த முன்னாள் அரசுப் பள்ளி ஆசிரியர் சிவலிங்கனார் பிறந்தநாள், இலக்கியப் பேரவை நிறுவனர் தின விழாவாகக் கொண்டாடப்படுகிறது. துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலக்கிய பேரவை செயலாளர் ஆசிரியர் சிவ.எம்கோ தலைமை வகித்தார். கமலாலயம் காப்பக நிர்வாகி ஆதிராஜன் வரவேற்றார். காப்பகக் குழந்தைகளுக்கு, ஆசிரியர்கள் கோ.முருகேசன், முனிரத்தினம், புஷ்பா, ஜவஹர், முன்னாள் கவுன்சிலர் பார்த்திபன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாண்டுரங்கன் ஆகியோர் சமபந்தி விருந்து பரிமாறினர். விழாவின் நிறைவாக சிறப்பாசிரியை கௌரி நன்றி கூறினார்.