முகப்பு
சேலம்

சோனா கல்லூரியில் 1,330 பேருக்கு பட்டமளிப்பு

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,330 மாணவ மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:28 AM
பகிர்:

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 1,330 மாணவ மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
 சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சோனா கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கல்லூரித் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று பட்டமளிப்பு விழா அறிக்கையை சமர்ப்பித்தார்.
 சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 15 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், 1,315 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும் வழங்கி பேசினார்.
 விழாவில் சோனா கல்விக் குழும முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என 3,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.