முகப்பு
சேலம்

தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம்

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:32 AM
பகிர்:

மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் தமிழ்நாடு ஆசிரியர்கள் கூட்டணியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் செ.முத்துசாமி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் க.செல்வராஜூ ஆண்டறிக்கை வாசித்து தீர்மானங்களை விளக்கிப் பேசினார். மாநில பொருளாளர் கே.பி.ரக்சித் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
 முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதோடு, இம்மாதம் 9-ஆம் தேதி அவரது நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கும் இரங்கல் தெரிவிப்பது,
 இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், பழைய ஒய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், மூத்தோர், இளையோர் ஊதிய முரன்பாடுகளை நீக்கி, இளையோருக்கு இணையாகப் பணியில் மூத்தோருக்கு ஊதியத்தை சமன் செய்யவேண்டும்.
 கேரளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.