சேலம்

நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுரை

தினமணி

நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தெரிவித்தார்.
 சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக 3-ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 4-ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தலைமை வகித்துப் பேசியது:
 நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காணும்பட்சத்தில் சட்டத்துக்குப் புறம்பான வழிகளை யாரும் தேடி செல்ல மாட்டார்கள்.
 வழக்குகளைத் தாமதப்படுத்தாமல் நடத்தி முடிக்கும் போது குற்றங்களும் குறையும். தற்போது புதிதாக 3 ஆவது மற்றும் 4 ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தொடங்கப்பட்டதன் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும் என்றார். இதில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் விஷ்வநாத், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவஞானம், மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, செயலாளர் அய்யப்பமணி ஆகியோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT