சேலம்

ஜூனியர் தடகளப் போட்டியில் டூ ஆர் டை அகாதெமி சாம்பியன்

DIN

சேலத்தில் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் டூ ஆர் டை  அதலடிக் அகாதெமி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
சேலம் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள விளையாட்டுப் போட்டிகள் 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குள்பட்ட பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் காந்தி விளையாட்டு மைதானத்தில் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள  வீரர், வீராங்கனைகள் பல்வேறு அகாதெமி, பள்ளி மற்றும் கல்லூரிகளின் சார்பில் கலந்து கொண்டனர். இதில், சுமார் 200 தடகள வீரர், வீராங்கனைகள் டூ ஆர் டை அதலெடிக் அகாதெமி சார்பாக கலந்து கொண்டனர். மேலும் 54 தங்கம், 36 வெள்ளி மற்றும் 15 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 105 பதக்கங்களை வென்று  ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை டூ ஆர் டை அதலடிக் அகாதெமி
பெற்றது.
மேலும் வீராங்கனைகள் 14, 16, 18, மற்றும் 20 வயது பிரிவிலும் வீரர்கள் 16 மற்றும் 20 வயது  பிரிவிலும்  தனிநபர் பட்டத்தை டூ ஆர் டை அதலெடிக் அகாதெமி தடகள வீரர்கள் பெற்றனர். இவர்களை, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசுகந்தி மற்றும் மாவட்ட தடகள பயிற்றுநர் க. இளம்பரிதி ஆகியோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாணவர்களை வாழ்த்தி சிறப்பித்தனர். மேலும், டூ ஆர் டை அதெலெடிக் அகாதெமி அணி மேலாளர்கள் அரவிந்தராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோரும்
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT