சேலம்

மருத்துவ மாணவர்கள் போராட்டம்

DIN

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து, சேலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கண்களை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதைக் கண்டித்து மருத்துவ மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தினந்தோறும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மருத்துவ மாணவர்கள் புதன்கிழமை கண்களை கட்டிக் கொண்டு வெயிலில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு புதிய ஆணையத்தை அமைப்பதால் தாங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வருடம் படித்த தங்களையும் ஆயுஷ் மருத்துவர்களையும் ஒன்றாக இணைத்து மருத்துவம் பார்க்க வைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. மருத்துவம் படித்த மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு என்ற புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகளால் மருத்துவத் தொழில் கடுமையாகப் பாதிக்கும். கிராமப்புற மாணவர் மருத்துவராகும் நிலை இருக்காது.
 மேலும் சித்தா, யுனானி போன்ற ஆயுஷ் மருத்துவர்கள் மருத்துவப் படிப்போடு 6 மாத பயிற்சிக்கு பிறகு மாற்று மருத்துவத்தையும் கையாளலாம் என்ற மத்திய அரசின் முடிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மருத்துவ மாணவர் நுழைவுத் தேர்வை முழுவதும் ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT