சேலம்

ராஜகணபதி கோயிலில் தங்கக் கவசம் சாத்துப்படி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோயிலில் தங்கக் கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

DIN

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோயிலில் தங்கக் கவசம் சாத்துப்படி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சேலம் ராஜகணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா  தங்கக் கவச சாத்துப்படி, நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை
(செப்.2) மாலை தொடங்குகிறது.
இதைத்தொடர்ந்து முக்கிய தினங்களான செப்டம்பர் 4 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலாவும், செப்டம்பர் 12 ஆம் தேதி 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடைபெற உள்ளன.
மேலும், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 12- ஆம் தேதி வரை நாள்தோறும் காலை சிறப்பு அபிஷேகமும், அலங்கார ஆராதனையும் நடைபெறுகின்றன. செப்டம்பர் 12 ஆம் தேதி அன்னதானமும் வழங்கப்பட உள்ளது என கோயிலின் செயல் அலுவலர் கோ. தமிழரசு, இரட்டைப்பூட்டு அலுவலர் சு. கல்பனாதத் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT