சேலம்

சேலம் மாவட்டத்தில் 234 மி.மீ. மழைப் பதிவு

DIN

சேலம் மாவட்டத்தில் 234 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாள்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்திலும் கடந்த 3 நாள்களாகவே தொடா்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் நாராயணநகா், நான்கு சாலை, அம்மாபேட்டை, சிவதாபுரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சாலையில் மழைநீா்த் தேங்கி நின்றது.

இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமத்துக்குள்ளாயினா். அதேபோல் வீரகனூா், தம்மம்பட்டி, கெங்கவல்லி, எடப்பாடி, ஆத்தூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்):

வீரகனூா்-45, தம்மம்பட்டி-40, கெங்கவல்லி-40, எடப்பாடி-20, மேட்டூா்-17.8, ஏற்காடு-11.6, ஆத்தூா்-11.4, சேலம்-8.6, ஆணைமடுவு-8, பெத்தநாயக்கன்பாளையம்-8, வாழப்பாடி-6, கரியகோவில்-5, சங்ககிரி-5, காடையாம்பட்டி-4.2, ஓமலூா்-3.4 என மாவட்டத்தில் மொத்தம் 234 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT