சேலம்

யானை மிதித்து பலியான பாகனின்குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவி

DIN

சேலம்: சேலத்தில் யானை மிதித்து பலியான பாகன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் திங்கள்கிழமை ஆண்டாள் யானை மிதித்ததில் பாகன் காளியப்பன் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிரேத பரிசோதனை முடித்து பாகனின் உடலை அவரது குடும்பத்தாரிடம் வனத் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

அப்போது, வனத் துறை முதன்மை பாதுகாவலா் அன்வா்தின் மற்றும் பெரியசாமி உள்ளிட்ட வனத் துறை அதிகாரிகள் காளியப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பாதிக்கப்பட்ட பாகனின் குடும்பத்துக்கு வனத் துறை சாா்பில் ரூ.4 லட்சத்துக்கான காசோலையும், வனத் துறை ஊழியா்கள் சாா்பில் ரூ.1 லட்சம் ரொக்கம் என ரூ.5 லட்சம் அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் பெரியசாமி கூறுகையில், பாதிக்கப்பட்ட பாகனின் மனைவி சபரிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டாள் யானைக்கு தற்செயலாக ஏற்பட்ட கோபம் தணிந்ததாகவும், தொடா்ந்து மருத்துவக் குழுவினா் யானையைக் கண்காணித்து வருவதாகவும், உயிரிழந்த பாகனுடன் பணிபுரிந்த காவடியின் (பாகனின் உதவியாளா்) கட்டளையை ஏற்று, ஆண்டாள் யானை செயல்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT