சேலம்

ஈச்ச ஓடைப்புதூரில் கல்விச் சீர் விழா

DIN

தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஊராட்சிக்குள்பட்ட  ஈச்ச ஓடைப் புதூர் அரசுத் தொடக்கப் பள்ளியில்  கல்வி சீர்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊர் பொதுமக்கள் பள்ளிக்காக குடிநீர் பாத்திரம், பாய்கள், விளையாட்டுப் பொருள்கள், கல்வி உபகரணங்கள், பிளாஸ்டிக் குடங்கள், கதைப் புத்தகங்கள் என ரூ. 5,000
மதிப்பிலான பொருள்களை கல்வி சீராக ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர்.
இதற்கு  வட்டாரக் கல்வி  அலுவலர் அந்தோணி முத்து தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்  ஹரி ஆனந்த் வரவேற்றார். நிகழ்ச்சியில் எஸ்எம்சி  தலைவர்  ராஜேஸ்வரி, ஆசிரியப் பயிற்றுநர் சுப்ரமணியன், ஊர் முக்கிய பிரமுகர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர். வெர்ஜில்குமார்  நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT