சேலம்

கிராமங்களில் எருது விடும் விழா

DIN

காணும் பொங்கலையொட்டி, வாழப்பாடி பகுதி கிராமங்களில்  எருது விடும் விழாக்கள் நடைபெற்றன.
 வாழப்பாடி அருகேயுள்ள புதுப்பாளையம், சிங்கிபுரம், சோமம்பட்டி, விலாரிபாளையம், மன்னார்பாளையம், பொன்னாரம்பட்டி, சேசன்சாவடி, வெள்ளாளகுண்டம் உள்ளிட்ட கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடைபெற்றன.
இதையொட்டி,   கோயில்களில் சிறப்புப் பூஜைகள்,  வழிபாடுகள் நடைபெற்றன. இதுதவிர,  கிராமங்களில் சிறுவர்-சிறுமியருக்கான விளையாட்டுப்போட்டிகள், பானை உடைத்தல், வலுக்குமரம் ஏறுதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமிய விளையாட்டுகளும் நடைபெற்றன. மேலும், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணைப்பகுதிக்கு ஏராளமானோர் சென்று பார்வையிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT